என் மகனே உனக்காக ஏங்குகிறேன். என் மகனே உனக்காக பரிதவிக்கிறேன் .என் மகனே உனக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறேன் .என் மகனே என் இதயத்தின் வலியை வேதனையை கவலையை நீ புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறாயே அதை உனக்கு புரியவைக்க என்னையே சிலுவை மரத்துக்கு ஒப்புக்கொடுத்து கொடிய வேதனை அனுபவித்து எனது உடலை அணுவணுவாக கிழித்து கொள்ள ஒப்பு கொடுத்தேன் .நான் எனது மனதில் உன்னை இழந்ததால் எனது மனதும் இப்படியே ஒவ்வொரு கணபொழுதிலும் கிழிக்கபட்டு கொண்டிருக்கிறது .இந்த வலி வேதனையை எத்தனையோ தீர்க்கதரிசிகள் வாயிலாக பலமுறை கூறினேன் .நீயோ அவர்களை தூசித்தாய் கேலி செய்தாய் ,அவமதித்தாய் ,துன்புறுத்தினாய் ஏன் கொலையும் செய்தாய் .இறுதியாக உனக்கு புரிய வைக்க நானே இறங்கி வந்தேன் உவமைகள் வழியாக பேசினேன் .நீ உன் மூதாதையர் போல என்னையும் கேலி செய்தாய் .அவமரியாதை செய்து துன்புறுத்தினாய் .இறுதியாக சிலுவையில் என்னை கொலை செய்தாய் .நீ எனக்கு செய்த அனைத்தையும் ஏற்றுக்கொண்டு அதை நன்மையாக மாறினேன் .உன் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை அனைத்து மனிதர்களும் காண மிகவும் கேவலமாக அசிங்கமாக பயங்கர மரணத்தை இஸ்ரவேல் தேசத்தில் நான் அன்று இறந்தது எதற்காக நீ என் தண்டனைக்கு தப்பி நீ என்னுடன் எனது இரட்சியத்தில் நித்திய நித்தியமாக என் கூடவே இருக்க வேண்டும் என்ற ஒரே காரணமே அன்றி வேறு எந்த காரணமும் இல்லை .நீ செய்ய வேண்டியது எல்லாம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் யேசுவே நான் உம்மை மனபூர்வமாக சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன் .நீர் எனக்காக 2000 ஆண்டுகளிற்கு முன் மரித்ததை ஏற்றுக்கொள்கிறேன் .அதற்காக நன்றி .நான் உமக்காக என்ன செய்ய வேண்டும் எனக்கு கற்பியும் ஆமேன் . என்று மட்டும் சொல் நான் உனக்கு சகலத்தையும் போதிப்பேன்
Showing posts with label அழுது. Show all posts
Showing posts with label அழுது. Show all posts
பிரான்ஸ் இன் பாதுகாபிற்காகவும் தேவனுடைய கோபம் தணியவும் செபித்து கொள்ளுங்கள்
கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா. சங்கீதம் 127:1
தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 128 பேர் பலியாகியுள்ளனர் பிரான்ஸ் இன் பாதுகாபிற்காகவும் தேவனுடைய கோபம் தணியவும் செபித்து கொள்ளுங்கள்
பிரான்ஸில் குடியேற பெரும்பாலான அகதிகள் ஏன் விரும்புவதில்லை’? வெளியான பகீர் காரணங்கள்
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டில் குடியேற பெரும்பாலான அகதிகள் விரும்பாததற்கான காரணங்களை பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
பிரான்ஸின் அகதிகள் ஓடுக்கும் சட்டங்கள் தொடர்பில் வானத்தையும் பூமியையும் படைத்த இயேசு
ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து வெளியேறி ஐரோப்பாவில் குடியேற விரும்பும் பெரும்பாலான அகதிகளின் முக்கிய இலக்காக இருப்பது ஜேர்மனி, ஸ்வீடன், பிரித்தானியா மற்றும் ஃபின்லாந்து நாடுகள் மட்டுமே.
முன்னொரு காலத்தில் வெளிநாட்டினர்களின் முக்கிய தெரிவாக இருந்த பிரான்ஸ் நாட்டை தற்போது அகதிகள் ஒதுக்குவதற்கான காரணங்கள் என்ன?
ஈராக் நாட்டை சேர்ந்த எட்வர்ட் (24) கூறுகையில், பிரான்ஸ் நாடு என்னுடைய எதிர்க்காலத்துக்கு உகந்த நாடு அல்ல. இதற்கு மிக முக்கிய காரணம் இங்குள்ள மிக மோசமான வேலையில்லா திண்டாட்டம் தான்.
பிரான்ஸ் நாட்டில் தற்போது மட்டும் சுமார் 3.5 மில்லியன் நபர்கள் வேலையில்லாமல் அவதியுற்று வருகின்றனர்.
இதை விட மிக முக்கியமாக இருப்பது அகதிகளுக்கான அரசின் கொள்கை முடிவுகள்.
குறிப்பாக, பிரான்ஸ் நாட்டில் குடியிருப்பு அனுமதி (Resdence Permit) பெறுவது என்பது மிகச்சாதரணமான விடயம் அல்ல என கருத்து கூறியுள்ளார்.
சிரியா நாட்டிலிருந்து சுவீடன் நாட்டிற்கு சென்றுள்ள அப்துல்லா ரஹ்மான் (26) என்பவர் கூறுகையில், பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுலாவிற்கு சென்று சுற்றிப்பார்ப்பதற்கு தான் தகுதியான நாடு.
ஆனால், வேலையை எதிர்ப்பார்த்து அந்நாட்டிற்கு செல்வது மிகவும் ஆபத்தானது. இந்நாட்டு மொழியை கற்பதும் மிகவும் சிரமான ஒன்று.
அகதிகளில் பெரும்பாலானவர்களுக்கு ‘அரைகுறையான’ ஆங்கிலம் மட்டுமே தெரியும். ஆனால், இந்த மொழிக்கூட இல்லாமல் பிரான்ஸ் நாட்டில் குடியேற தேவையான பெரும்பாலான விண்ணப்பங்கள் பிரெஞ்ச் மொழியில் மட்டுமே இருப்பது ஏற்புடையது அல்ல என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜேர்மனிக்கு வந்துள்ள அகதிகளில் சுமார் 1,000 நபர்களுக்கு குடியேற்ற அனுமதி வழங்க தயார் எனக்கூறி அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே அதிகாரிகளை ஜேர்மனிக்கு அனுப்பி வைத்தார்.
ஆனால், அதிபர் எதிர்ப்பார்த்தைவிட குறைவாக 600 அகதிகளே பிரான்ஸ் நாட்டிற்கு வந்துள்ளனர்.
சூடான் நாட்டை சேர்ந்த கரீம் என்ற நபர் சுமார் 8 மாதங்களாக பாரீஸில் உள்ள ஒரு பூங்காவில் தங்க வந்ததன் விளைவாக அவருக்கு அரசு குடியேற்ற அனுமதி வழங்கியது.
இது குறித்து பேசிய அவர், ‘புகலிடம் கிடைத்தால் போதுமா? வருமானத்திற்கு வேலை கிடைக்க வேண்டுமே…இந்நாட்டு மொழியை கற்றுக்கொண்டால் தான் அதிக வேலை வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், அதற்கான வழிமுறைகள் குறைவாக இருக்கிறது’ என வேதனை தெரிவித்துள்ளார்.
சிரியா நாட்டை சேர்ந்த Sabreen Al-Rassace என்பவர் கூறுகையில், பிரான்ஸ் நாட்டில் ஒரு வீட்டை பார்த்து குடியேறுவது என்பது மிகவும் சிரமமானதாக இருக்கிறது.
குடியேற்ற அனுமதி பெற வேண்டும் என்றால், அதிகாரிகளுக்கு கட்டாயம் வீட்டு முகவரி அளிக்க வேண்டும். ஆனால், வீடே கிடைக்காதபோது வீட்டு முகவரியை எப்படி கொடுக்க முடியும்?
முழுவதுமாக, அகதிகளிற்கு குடியேற்ற அனுமதி வழங்கும் இந்நாட்டு அரசாங்க அதிகாரிகளின் வழிமுறைகள் அனைத்தும் மிகவும் கடினமானதாகவே உள்ளது என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில், பிரான்ஸ் நாட்டில் குடியேற்ற அனுமதிக்காக காத்துக்கொண்டுருக்கும் 60 ஆயிரம் நபர்களுக்கு 30 ஆயிரம் படுக்கைகள் தான் இருக்கின்றன.
எஞ்சிய நபர்கள் நண்பர்கள் வீட்டில் அல்லது பூங்காக்களில், இன்னும் மோசமாக தெருக்களில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை நன்கு உணர்ந்த சில அகதிகள், ‘பிரான்ஸ் நாடு அகதிகளுக்கான நாடு அல்ல’ என வெளிப்படையாகவே எச்சரிக்கை விடுக்கும் வகையில் சில நபர்கள் பேஸ்புக்கில் பக்கத்தை தொடங்கி பரப்பி வருகின்றனர்.
புலம்பெயர்தல் குறித்து ஆய்வு செய்து வரும் Francois Gemene என்ற நிபுணர் கூறுகையில், பிரான்ஸ் நாட்டில் குடியேற பெரும்பாலான அகதிகள் விரும்பாதது, இந்நாடு அவர்களை எந்தவிதத்திலும் கவரவில்லை என்பதையே காட்டுகிறது.
தற்போது உள்ள நடைமுறைகளை மறு ஆய்வு செய்து, அகதிகளுக்கு பயன்படும் வகையில் விதிமுறைகளை மாற்றி அமைப்பதில் பிரான்ஸ் அரசு அக்கறை செலுத்தினால் மட்டுமே எதிர்காலத்தில் அகதிகளுக்கான நாடாக பிரான்ஸ் திகழும் என Francois Gemene கருத்து தெரிவித்துள்ளார்.
ஏசாயா
10 அதிகாரம்
- 1. ஏழைகளை வழக்கிலே தோற்கப்பண்ணவும், என் ஜனத்தில் சிறுமையானவர்களின் நியாயத்தைப் புரட்டவும், விதவைகளைச் சூறையாடவும், திக்கற்ற பிள்ளைகளைக் கொள்ளையிடவும்,
2. அநியாயமான தீர்ப்புகளைச் செய்கிறவர்களுக்கும், கொடுமையான கட்டளைகளை எழுதுகிறவர்களுக்கும் ஐயோ!
3. விசாரிப்பின் நாளிலும், தூரத்திலிருந்து வரும் பாழ்க்கடிப்பின் நாளிலும் நீங்கள் என்னசெய்வீர்கள்? உதவிபெறும்படி யாரிடத்தில் ஓடுவீர்கள்? உங்கள் மகிமையை எங்கே வைத்து விடுவீர்கள்?
4. கட்டுண்டவர்களின்கீழ் முடங்கினாலொழிய கொலைசெய்யப்பட்டவர்களுக்குள் விழுவார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.
கிறிஸ்தவர்களின் - கி.மு, கி.பி - ஒரு கண்ணோட்டம்
"BC - AD" Rev.Fr.R.John Joseph A. ஆவிக்குரிய மனிதனின் சரித்திரம்: ஆவிக்குரிய மனிதனின் சரித்திரம் எங்கே ஆரம்பிக்கிறது?
ஆவிக்குரிய மனிதனின், சரித்திரத்தை விளக்குக :- 1. கடவுளின் ஜீவ மூச்சை பெற்ற மனிதன் :
2.சோதனையில் வீழ்ந்த மனிதன் :
3. கடவுளின் ஆவியை இழந்த மனிதன் :
4. கடவுளே பரிகாரி :
5. கடவுளின் முதல் வாக்குறுதி :
6. மீட்பின் திட்டம் :
7. பாவத்தின் இறுதிநாள் : இறுதிநாள் என்பது என்ன? ஒரு மனிதனுடைய, பாவத்தின் கடைசி நாளே, “இறுதிநாள்” ஆகும். இந்த இறுதிநாளை அடைய, மனிதன் என்ன செய்ய வேண்டும்?
இவ்வாறு, பாவத்திற்காக மனஸ்தாபப்பட்டு, கடவுளிடம், மனம் திரும்பி, வரும்போது, கடவுள் தம் ஆவியைப் பொழிவதாக, வாக்குறுதி கொடுக்கின்றார். -யோவே 2:12; 28-30. 8. உலக பாவத்தின் இறுதிநாள் :
9. உலக பாவத்தின் இறுதிநாளில், பரிசுத்த ஆவி பொழியப்பட்டார் :
1. கி.மு, கி.பி :
2. கிறிஸ்து என்றால் மெசியா :
3.மெசியா என்றால், அபிஷேகம் பெற்றவர் :
4.இப்போது கி.மு, கி.பி, என்றால் பொருள் என்ன? • கிறிஸ்துவுக்கு முன் - மெசியாவுக்கு முன் • கிறிஸ்துவுக்கு பின் - மெசியாவுக்கு பின். • அபிஷேகம் பெற்றவருக்கு முன் - அபிஷேகம் பெற்றவருக்கு பின். • ஆவியின் பொழிதலுக்கு முன் - ஆவியின் பொழிதலுக்கு பின். 5. இயேசுவும் மெசியாவும் :
6.ஆவிக்குரிய இயேசு :
7. இயேசுவே மெசியா :
இயேசு உருவாக்கிய சபையில் - கி.மு, கி.பி
இயேசு உருவாக்கிய கி.மு சபையின் தன்மைகள் யாவை? 1. இயேசுவே அந்த சபையை உருவாக்கினார் - மத் 4 :18-22 ; 9 :9-13 ; லூக் 6 :12-16. 2. அந்த சபையில், போதனைகள் இருந்தன - மத் 4:23 ; மத் 5,6,7 அதி. 3. அங்கே புதுமைகள் நடந்தன - மத் 4 :24. 4. அந்த திருச்சபையில், திருச்சபையின் தலைவர் இருந்தார் - மத் 16 :18. 5. அவர்களுக்கு, அப்போஸ்தலர் இருந்தனர் - லூக் 9 :1-6. 6. அந்த திருச்சபையில், இயேசுவின் வழிநடத்தல் இருந்தது - மத் 10:16-40. 7. அங்கு திருப்பணிகள் சிறப்பாக நடந்தன - லூக் 10 :1-20. 8. அந்த திருச்சபையில், திருச்சங்கங்கள் நடந்தன - மாற் 6 :30,31; லூக் 10:17-20. 9. அங்கு மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது - மத் 8:18 ; 14:13,14 ; லூக் 5:1. கி.மு சபையின் சில சிறப்பு அம்சங்கள் பேதுரு - தலைவர்:
அப்போஸ்தலர் :
விசுவாசிகளின் கூட்டம்:
சீடர்கள்:
பக்தர்கள்:
ஞானஸ்நானம் :
இயேசு உருவாக்கிய கி.பி சபையின் தன்மைகள் என்னென்ன?
கி.பி திருச்சபையின் சில சிறப்பு அம்சங்கள்: பேதுரு:
அப்போஸ்தலர்:
ஆவிக்குரிய விசுவாசிகளின் கூட்டம்:
கி.பி சபையில் திருமுழுக்கு :
அதாவது, கி.பி சபையில், முதலில் போதனையும், அதை ஏற்றுக்கொண்டவர்களுக்கு, “மனஸ்தாபம்”, “மனம்திரும்புதல்”, “பாவ மன்னிப்பு”, “அருட்பொழிவு” ஆகிய அனைத்தும், கிடைத்த பின்பே, “தண்ணீர் திருமுழுக்குச் சடங்கு” நடைபெற்றது - தி.ப 2:14,37,41,38 ; எபே 1:7. அப்படியென்றால், இயேசு கி.மு, கி.பி, என இரண்டு சபைகளை உருவாக்கினாரா?
கி.மு திருச்சபைக்கும், கி.பி திருச்சபைக்கும், உள்ள உறவு என்ன? பரிணாம வளர்ச்சி:
கி.பி சபையில், கி.மு சபை இருக்குமா?
உதாரணம்: 1. பிலிப்புவின் பணியும் - பேதுரு ஆவியைப் பொழிதலும் :
2. அப்பல்லோவின் பணியும் - பவுல் ஆவியைப் பொழிதலும்
கி.மு, கி.பி - பாரம்பரியம் - வழிமரபினர் ஏதேன் தோட்டத்தில் தொடங்கி, இன்று வரை:
இருவித பாரம்பரியங்கள் :
அன்றும், இன்றும் :
1. ஆவிக்குரிய சட்டம் - மாமிசத்தின் சட்டம் - உரோ 7:23; 8:2
2. விசுவாசிகளும் - அவிசுவாசிகளும் - 2கொரி 6:14-16 :-
3. விண்ணை சார்ந்தவர் - மண்ணை சார்ந்தவர் - 1கொரி 15:45-49 :-
4. நீதிமான்கள் - அக்கிரமிகள் - எசே 18:9,23; 1பேது 4:18 :-
5. பரிசுத்தவான்கள் - பாவிகள் - எபே 1:4, 1திமொ 1:15 :-
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1. இன்று, கி.மு விசுவாசிகள், இருக்கின்றார்களா?
- ஆம் இருக்கின்றனர்.
- புதுமைகள் மூலமாகவும், போதனைகள் மூலமாகவும், ஆண்டவரை அறிகிறார்கள். ஆனால், அதற்கும் மேல் போக, விரும்புவதில்லை.
- சில விசுவாசிகள், ஆண்டவரை அறிகிறார்கள். ஆனால், மனம்திரும்பி, பாவமன்னிப்பு பெற்று, அருட்பொழிவை அடைந்து, ஆவிக்குரிய குடும்பமாக, வளர்வதில்லை.
2. இதன் வேறு காரணம் என்ன?
- இதன் வேறு காரணம், குடும்ப பாரம்பரியமாகவும் இருக்கும்.
- குடும்பத்தில், பெற்றோர், ஆண்டவரை அறிந்ததோடு நிறுத்திக் கொண்டவர்கள்.
- எனவே, பிள்ளைகளும், அதையே பின்பற்றி வருகின்றனர்.
- அதர்க்கும் மேல், பல படிகளில், வளர வேண்டும் என்று கூட, அறியாத விசுவாசிகளாக, அவர்கள் இருக்கின்றார்கள்.
3. இன்று, கி.மு சபைகள் இருக்கின்றனவா?
- ஆம். இருக்கின்றன.
- இயேசு “கிறிஸ்து - அறிமுகத்தோடு”, தங்கள் பணிகளை, இந்த சபைகள், முடித்துக்கொள்கின்றன.
- அந்த சபைகளில், போதனைகள் உண்டு, புதுமைகளும் உண்டு, அவற்றை சுற்றியே வாழ்கின்ற விசுவாசிகளும் உண்டு.
- ஆனால், அந்த விசுவாசிகளை, மனம்திரும்புதல், பாவமன்னிப்பு, அருட்பொழிவு, ஆவிக்குரிய குடும்பம், என்னும் கி.பி நிலைக்கு, இந்த சபைகள் வளர்ப்பதில்லை.
- தாங்கள் இருக்கும் கி.மு நிலையை நியாயப்படுத்த, (To Justify), புது விளக்கங்களையும், சட்டங்களையும், மாற்றங்களையும் உருவாக்கி, இந்த சபைகள் ஆத்ம திருப்தி அடைகின்றன.
4. இந்த சபைகளை எப்படி அழைக்கலாம்?
- ஸ்தாபன சபைகள், உலக சபைகள், அரசியல் சபைகள் என்றும், “கி.மு சபைகள்” என்றும், அழைக்கலாம்.
5. இந்த நிலை மாறுகிறதா?
- ஆம். நிச்சயமாக மாறுகிறது.
- இந்த கி.மு சபையிலுள்ள விசுவாசிகள், வேதத்தை வாசிப்பதிலும், ஜெபிப்பதிலும், “ஆழமாக” ஈடுபடும் போது, ஆவியானவர் அவர்கள் அகக்கண்களைத் தொடுகிறார்.
- இதனால், “நிறைவு அடைய”, மத் 19:21, இவர்கள், கி.பி சபையை அணுகுகின்றார்கள்.
6.எல்லா கி.மு சபைகளும், கி.பி சபைகளாக மாறுமா?
- வெகு சீக்கிரத்திலேயே மாறும்.
- “சூனாமி அலை” திரண்டு வரும்போது, அதை, பணம், அதிகார பெலம், உலக ஆதாயம், பயமுறுத்துதல், அச்சுறுத்துதல், பொய், புரட்டு, போன்ற “கைவிசிறியை” வைத்து தடுக்கப் பார்க்கலாமா?
- ஆவியானவரின் வருகையும், “சூனாமி அலை” போன்றதே. அழிப்பதற்கல்ல, ஆக்குவதற்கு.
- காரணம், திருச்சபையை உருவாக்குவதும், உருமாற்றுவதும், விசுவாசிகளுக்கு புத்துயிர் அளிப்பதும், ஆவியானவரின் வேலை.
- ஆவியானவரின் செயல்பாட்டை, மனித, உலக, சக்திகள் தடுக்க முடியாது.
- ஆவியானவர், இறுக்கமான இதயங்களை, தொட ஆரம்பித்து விட்டார்.
- ஆவியானவர், “கட்டுகளுக்குள்” வாழும், சபை மேல்மட்டங்களை உடைக்க ஆரம்பித்துவிட்டார்.
- ஆம்! இது, ஆவியானவர் ஆட்சி புரியும் காலம். அவர் தொடங்கிய பணியை வெற்றியோடு முடிப்பார்.
- கி.மு, கி.பி - யாக மாற, நம்மைத் தாழ்த்தி, ஜெபத்தில் நிலைப்போம். ஆமென்.
- நன்றி http://www.catholicpentecostmission.in/Bc_Ad.html
Popular Posts
- The power of Fasting | உபவாச ஜெபத்தின் வல்லமை | Prayer part - 1|ஜெபம் பாகம் -1
- கிறிஸ்தவனை Disturb பண்ணாதே Tamil Christian Songs HD | Pr Moses Rajasekar
- மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு
- அத்திமரத்தின் கதை-1,பாபிலோன் விழுந்தது-இரண்டாம் துாதனின் சத்தம்
- கத்தோலிக்க பெந்தக்கோஸ்து மிஷனும்" - பைபிள் திருச்சபையும்
- எனது உடலை அணுவணுவாக கிழித்து கொள்ள ஒப்பு கொடுத்தேன்
- இனி நான் மாதா ஜெபமாலை சொல்ல வேண்டுமா?
- கர்த்தருடைய தேசத்தில் எமது பாதங்கள் - 2
- நரகத்தின் வாசல் இதுதானோ ?
- இயேசுவினால் உயர்வு நிச்சயம்


